கோவை விளாங்குறிச்சி தண்ணீர்பந்தல் சாலையில் இந்தியன் ஆயிள் கார்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து விபத்து – குழாய் ஆய்வு பணியின் போது விபத்தால் பரபரப்பு..
கோவை மாவட்டத்தில் 9 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு வழங்கும் பணிகளை இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றனர். வரும் 8 ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு முக்கிய சாலைகளில் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. குறிச்சி, மலுமிச்சம்பட்டி பகுதிகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், அவினாசி சாலை, காளப்பட்டி, தண்ணீர் பந்தல் சாலை உள்ளிட்டு பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகிறது. அப்போது விளாங்குறிச்சி சாலையில் உள்ள குழாயில் எரிவாயுவை தண்ணீருடன் கலந்து சோதனை மேற்கொண்ட போது குழாய் வெடித்து சிதரியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காட்சியளித்தது. ஆனால் அதிஸ்டவசமாக உயிரிழப்பு காயங்கள் இல்லை.