கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளக்கரைகளில் பூங்கா அமைத்தல், நகரில் மாதிரி சாலைகள், பூங்கா உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய குளத்தில் படகு சவாரி அமைக்கப்பட்டுள்ளது. உக்கடம் புறவழிச் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் மிதவை பாலம், ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சிவராமனின் 2 -வது மகன் வினோத்குமார் என்பவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக வினோத்குமார் மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு ...
கோவை வேலாண்டிப்பாளையம் கோவில்மேடை சேர்ந்தவர் கணேஷ்பாபு (வயது 24). டிரைவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (22). தொழிலாளி. இந்த நிலையில் கணேஷ்பாபுவின் தம்பி கமலேஸ்வரன் (19) என்பவர் அண்ணனின் நண்பர் கார்த்திக்கை மரியாதை இல்லாமல் பேசி வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கமலேஸ்வரன், கார்த்திக்கு போன் ...
கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுப்பேகண்டன் புதூரை சேர்ந்தவர் பிரசாந்த் கணேஷ் (வயது 44). லாரி டிரைவர். சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி ...
கோவை: பொள்ளாச்சி மரபேட்டை வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 58). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது வலது கால் செயல் இழந்தது. இதனை நினைத்து அவர் மனவேதனை அடைந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அைடந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மரபேட்டை மாரியம்மான் கோவில் முன்பு ...
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த காலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றிய கணியூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஊராட்சிமன்ற செயலர்கள் உள்ளிட்ட பெயர் கல்வெட்டுக்கள் மன்ற வளாக சுற்றுச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பிளக்ஸ் போர்டில் செய்யப்பட்ட அசல் கல்வெட்டு ...
கோவைக்கு முதலமைச்சர் வருகையையொட்டி மாநகராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக அறை குறையாக பணிகளை செய்து வந்தாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு வருகை தந்து உள்ளார். இன்று ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் பொள்ளாச்சி ...
தி.மு.க வினரின் விஷம பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி. கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொள்ளாச்சியில் அ.தி.மு.க வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இணைவதாக தி.மு.க வினர் விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் அது முற்றிலும் தவறானது என்றும் ...
கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச் சென்ற பொதுமக்கள் கோவை: கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற நலத் திட்ட நிகழ்ச்சி முடிந்த கையோடு அங்கிருந்த பொதுமக்கள் தோரணத்திற்காக கட்டப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் இளநீர் ஆகியவற்றை தூக்கி சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 4 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ...
கோவை வந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள கோவை வந்துள்ளார். இதற்காக, கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலைய நுழைவாயில் முதல் மெயின் ...