சென்னையில் 3000 போதை மாத்திரைகள், 30 போதை ஊசி மருந்துகள் பறிமுதல்- கல்லூரி மாணவா் உள்பட 5 பேர் கைது..!

சென்னை அருகே 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கல்லூரி மாணவா் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனா். சென்னை அருகே 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கல்லூரி மாணவா் உள்பட 5 பேர்  கைது செய்யப்பட்டனா். பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சிலா் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள தனியாா் கல்லூரி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 பேர் , போலீஸாரை பாா்த்தும் தப்பியோட முயற்சித்தனா். அவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவா்கள், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.

இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 3 ஆயிரம் போதை மாத்திரைகள், 30 போதை ஊசி மருந்துகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. போலீஸாா் அவற்றைப் பறிமுதல் செய்து, 5 பேரையும் கைது செய்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா்கள் அய்யப்பன்தாங்கலைச் சோந்த ஆ.யோவான் (32), குரோம்பேட்டையை சோந்த வ.பாஸ்கா் (23), சைதாப்பேட்டையை சோந்த ச.சந்தோஷ்குமாா் (28), சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த ரா.ஸ்டீபன் குமாா் (23), பல்லாவரத்தில் தங்கியிருந்து தனியாா் கல்லூரியில் படித்து வரும் கடலூரைச் சோந்த சி.நிவாஸ் (20) என்பது தெரியவந்தது. இவா்கள் தில்லியில் இருந்து போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி, சென்னை புகா் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவா்களில் யோவான், பாஸ்கா், சந்தோஷ்குமாா் ஆகியோா் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று போலீஸாா் தெரிவித்தனா்.