குணா: ஆழ்துளை கிணறு போல வடிவமைத்து சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து வந்த சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் குணாமாவட்டம் சன்சோடா, ரகோகர் ஆகிய 2 கிராமங்களில் அண்மையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு ஆழ்துளைக் குழாயில் போலீஸார் சாராயம் வருவதைக் கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அங்கு பள்ளம் தோண்டினர். அப்போது அங்கு 7 அடி ஆழத்தில் ஏராளமான சாராய ஊறல் கேன்கள் இருந்துள்ளன.
இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்துஅழித்தனனர். சாராய ஊறல்களுக்கு மேல ஆழ்துளை குழாய்கள் போல அமைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் சாராயத்தை வெளியே எடுத்துள்ளனர். பின்னர் பாலித்தீன் பைகளில் சாராயத்தைசேகரித்து விற்பனை செய்துவந்துள்ள தகவல் போலீஸா ருக்குத் தெரியவந்துள்ளது.
சாராய ஊறல் கேன்களில் இருந்த சாராயம், எத்தில் ஆல்க ஹால் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 2 கிராமங்களும் வனப்பகுதிக்குள் வருவதால் போதிய ஆள்நடமாட்டம் இல்லை.இதனால் சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக 8 பேர் மீதுபோலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Leave a Reply