கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே கழிவறையினை ...

திருவனந்தபுரம்: மகாபலி மன்னன் மக்களை சந்திக்க வரும் நாள் தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு அத்தப் பூக்கோலமிட்டு மன்னனை வரவேற்பார்கள். கேரள மாதமான சிங்ஙம் மாதத்தில் அத்தம் நாளில் இருந்து திருவோணம் வரை 10 நாள் மலையாளிகள் தங்களது வீடுகளின் முன் பூக்கோலம் இடுவார்கள். ...

முசிறி : திருச்சி மாவட்டம் முசிறியில் நாயக்கர் காலத்து நான்கு செப்பு பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்து சமய அறநிலையத்துறையில் மண்டல தொல்லியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆமூர் நாக.கணேசன்.இவர் இப்பகுதியில் உள்ள கோயில்களை ஆய்வு செய்தபோது இந்த சிறப்பு வாய்ந்த பட்டயங்கள் தெரிய வந்தது. முசிறி சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயிலில் இச்செப்பு பட்டயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ...

தமிழகத்தில் சென்னை, கோவை, உதகை, திருப்பூர், குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணத்தை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். மலையாள மொழி பேசுவோர், ஓணம் பண்டிகையை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆன்மிக வரலாற்றின் அடிப்படையில், மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக, ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில், மலையாள மொழி ...

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆட்சி ...

லண்டன் : இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது உள்துறை மந்திரியாக பணியாற்றிவந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரித்தி படேல் தனது பதவியை ராஜினாமா நேற்று செய்தார். தற்போது, இங்கிலாந்து நாட்டின் புதிய உள்துறை மந்திரியாக சூலா பிரேவர்மென் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சூலா பிரேவர்மென் தமிழ்நாட்டை ...

கோவை : தஞ்சாவூர் எம்.கே. ரோட்டை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் திவாகர் (வயது 28) எலக்ட்ரிக்கல்- பிளம்பிங் தொழில் செய்து வந்தார்.இவர் சூலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையம் பிரபு என்பவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை செய்து கொண்டிருக்கும்போது சின்டெக்ஸ் டேங்க் உடைந்து மேற்கூறையில் நின்று வேலை ...

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைத்தல், குடிநீர், பாதாள சாக்கடை, சூரிய மின்சக்தி, எல்.இ.டி விளக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. வாலாங்குளம், பெரியகுளத்தில் ...

கோவை துடியலூர் அருகே உள்ள சின்ன தடாகத்தைச் சேர்ந்தவர் முருகேசன். டிரைவர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 19) இவர் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று இரவில் இவரது வீட்டில் உள்ள விளக்கு திடீரென்று எரியவில்லை. இதனால் மோகன்ராஜ் அங்குள்ள மீட்டர் பாக்சில் பழுது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வெள்ளியங்காடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் முத்துகல்லூர், சுண்டகரை, பீளியூர், சோலமலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தையொட்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வன பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் ...