கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் இரண்டாவது டிவிசனில் வசித்து வருபவர் சுந்தரம் என்பவரின் மகன் துரைராஜ் வயது 59, இவர் இன்று காலை 6 மணியளவில் தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சி மேற்க் கொண்டு நல்லகாத்து சுங்கம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அப்பகுதியிலுள்ள சோலையிலிருந்து வெளிவந்த ஒற்றை காட்டுயானை ஒன்று அவரை துரத்தி கீழே தள்ளி தாக்கியதில் இடது காலில் ரத்தகாயங்களுடன் கீழே கிடந்த வரை அவ்வழியாக வந்த பொதுமக்கள் சோலையார் எஸ்டேட் நிர்வாகத்தினரிடம் தகவலலித்து எஸ்டேட் ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது