கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை,முடீஸ், ஷேக்கல்முடி, காடம்பாறை ஆகிய காவல் நிலைய சரகங்களில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் சில்லரை மது விற்பனை, குட்கா உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது இதில் செப்டம்பர் மாதத்தில் சில்லரை மது விற்பனை செய்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 43 மது பாட்டில்கள் கைப்பற்றியும் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 கிலோ குட்கா கைப்பற்றி நடவடிக்கை மேற்க் கொள்வதாகவும் அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து சில்லரை மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேர்களை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 217 மது பாட்டில்கள் கைப்பற்றியும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 6.1/2 கிலோ குட்காவை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து இதுவரை ஒருபெண் 5 ஆண்கள் உட்பட்ட 6 நபர்களை கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டு சுமார் 15 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச்சென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பாதுகாப்பு பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் போதை பொருள்களுக்கு மாணவர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர் மேலும் சட்டத்திற்கு புறம்பாக மது, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக துணை கண்காணிப்பாளர் தொலைபேசி எண்.9498231546, வால்பாறை காவல் ஆய்வாளர்- 8344435616 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்