கோவை ,சிங்காநல்லூர் எஸ்.ஐ .எச். எஸ் காலனியில் உள்ள ,ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலூர் மாவட்டம் ,காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு ...
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 52) இவர் கணுவாய் திருவள்ளுவர் நகரில் உள்ள தனியார் மெட்டல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது கை மின் ஒயரில் பட்டது.இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் ...
கோவை அருகே உள்ள குறிச்சியில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு அருகே உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கோவை டாடாபாத்தில் உள்ள அவுசிங் டிவிஷன், நிர்வாக அதிகாரி,எட்வின் சுந்தர் சிங் தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றனர்.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது ...
மாஸ்கோ: உக்ரைனில் அந்நாட்டு ராணுவத்திடம் தோற்று ரஷ்ய படைகள் பின்வாங்குவதால் அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக ரஷ்யாவில் அதிருப்தி நிலவுகிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியது. ஒரு சில வாரத்தில் முடிந்து விடும் என கருதப்பட்ட இந்த போர், ...
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டையை சுழற்றியிருப்பது வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் ...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மற்ற கட்சிகளை விட பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இப்படி இருக்கும் இந்த ஊராட்சியில் இதுவரை ஒருமுறைதான் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலின் பொழுது தலைவர் பதவி ஆகியவை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது இந்த ஊரின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த முறையும் ...
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. ரோட்டோரங்களில் பாதுகாப்பு இல்லாமல் பேனர் வைப்பவர்களை விடுங்கள். இப்படி பேனர் வைப்பவர்களை சினிமா நடிகர்களும், அரசியல் தலைவர்களும் ஏன் கண்டிப்பதில்லை. கட்சி பேதமில்லாமல் எல்லோருமே இதை விரும்புகிறார்கள். பேனர் வைப்பவர்களுக்கு பதவியும், செல்வாக்கும் உயர்கிறது. தமிழகத்தில் பல மரணங்களும், விபத்துக்களும் இப்படி பாதுகாப்பில்லாமல் பேனர் வைப்பதால் நடந்துள்ளது. ...
சென்னை: ”12 மணிநேரம் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்காததால் எனது செல்போன், வீட்டில் உள்ள செல்போனை கேட்டு வாங்கி சென்றுள்ளனர். இது உச்சக்கட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது” என லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு ...
வடகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடர் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். சென்னை: தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில், நடந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக துறை உயர் அலுவலர்களுடன் ...
இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை பொருட்டு கட்சிகளுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அங்கீகாரத்தை ...