ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பூண்டு உள்பட காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டிற்கு இந்தியா முழுவதும் வரவேற்பு உள்ளது. நீலகிரியில் ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்ட வெள்ளை பூண்டு, நடப்பு மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ...
கோவை மாநகரில் சிங்காநல்லூர் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து கோவையின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கபடுகின்றன. மேலும், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் மக்கள் ...
தண்ணி தொட்டியில் மூழ்கி பெண் பலி: மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் குற்றச்சாட்டு – போலீஸ் விசாரணை கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கு இடையே ஒரு சாலை விபத்தில் மூர்த்தி இறந்து விட்டார். இந்நிலையில் தேவி ஜி.வி ரெசிடென்சி குழுமத்தின் உப்பிலிபாளையத்தில் ...
கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில் ரெயில்வே பாலத்துக்கு அடுத்துள்ள நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்துக்கு பதில் புதிய பாலம் கட்டப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்டும் வரை வெள்ளலூர், பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் கோவை நகருக்குள் வருவதற்கு வசதியாக புதிய ...
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனான 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராகியுள்ளார். இதற்கிடையில் இளவரசர் சார்லஸுக்கு காலம் காலமாக சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் இருளில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தி கார்டியன் அறிக்கையின் படி, செப்டம்பர் 8 அன்று ராணி எலிசபெத் மறைந்த பிறகு, டஜன் ...
புதுடெல்லி: ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். ...
கோவையில் மாடு திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது… கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் வழக்கறிஞர். இவர் வீட்டில் உள்ள தோட்டத்தில் 5 ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று இரவு நாய்கள் சத்தமிட்டதால் அவரது மனைவி மற்றும் மகனிடம் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். அங்கு சென்று ...
கோவை: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 72) இவர் அந்த பகுதியில் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 12ஆம் தேதி சிறையில் திடீர் காய்ச்சல் மூச்சு ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கருத்தரங்க கட்டிடத்தில் மாதாந்திர குற்ற தடுப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-கோவையில் கடந்த ஒரு மாதமாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா குட்கா ,புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.இதற்காக மாநகர காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.கஞ்சா போதை பொருட்கள் அறவே இல்லாத மாநகரமாக கோவை ...
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம், பழனி ஆண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 59) இவர் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று அவர் கண்ணம்பாளையத்தில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...