கோவையில் நாளை( வெள்ளிக்கிழமை ) விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு குளங்களுக்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது ‘காலை முதல் இரவு வரை நகரில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் விநாயகர் ...

சென்னை: வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.96.00 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 5வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதை அடுத்து ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கோவிந்த நாயக்கன்பாளையம், பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் .இவரது மனைவி கல்பனா ( வயது 37அதே பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை.இவர் கல்பனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம்.இதை அவரது மனைவி சங்கீதா பல தடவை கண்டித்தார்.இருவரும்  கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலையின் மனைவி சங்கீதா, அங்குள்ள கல்பனா வீட்டுக்கு சென்றார். அவருடன் ...

கோவை புதூர,எம்.ஜி.ஆர் .நகர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். சென்ட்ரிங் தொழிலாளி.இவரது மனைவி சாந்தி (வயது 42) இவர்களுக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர். 2 -வது மகன் சுகுமார் (வயது 28 )பி. காம்.( சி. ஏ )படித்து முடித்துவிட்டு குளத்துப்பாளையம் பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை ...

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை பிரபலமாக்கி வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக வெளியான ரஜினியிம் சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ...

சென்னை: விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோவில் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் உள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து சென்று கரைத்து விட வேண்டும் என்று ஊர்வலத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. ...

நாடு முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 566 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் 48 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ஒன்றிய அரசு ...

வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது‌. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு ...

சென்னை: மத்திய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, 2-ம் தேதி கேரளா செல்லும் அவர்,கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு உள்ளிட்ட திட்டங்கள் குறித்துபேசுகிறார். மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் ...

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று  தொடங்கி வைத்தார். பள்ளிக்கு வர இயலாத, தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளி திட்டத்தை தில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை நேற்று தொடங்கினார் . தில்லி ...