குடும்ப பிரச்சனையில் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவிக்கு 5 ஆண்டு சிறை..!

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு , கொண்டம்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது 40 )கூலி தொழிலாளி. குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி தேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி கணவரை தாக்கி கொலை செய்ய முயன்றார் . இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மனைவி தேவியை கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு பொள்ளாச்சி உதவி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இதில் தீர்ப்பு கூறப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி மோகனவள்ளி குற்றம் சாட்டப்பட்ட மனைவி தேவிக்கு 5ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 5 ஆயிரம், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவ சேனாதிபதி ஆஜரானார்.