கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சின்னகல்லிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது அண்ணன் சுப்பன் (56). இவரது மகன் கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று அண்ணன்-தம்பி இருவரும் நதிகவுண்டன் புதூர் பகுதியில் நின்று பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த முதியவர் ஒருவர் சத்தம் போட்டு கொண்டு இருந்தார். பின்னர் ...
கோவை: தமிழகத்தில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் வரும் 15-ந் தேதி மதுரையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் மாநகராட்சியில் 62 பள்ளிகள், மேட்டுப்பாளையத்தில் 9 பள்ளிகள், மதுக்கரையில் 3 பள்ளிகள் என மொத்தம் 74 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 1-ம் வகுப்பு ...
கோவை-போத்தனூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 37 நாட்களுக்கு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால் சொர்ணூரில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, காலை 11.05 மணிக்கு ...
பல கோடி மதிப்புள்ள பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது- வனத்துறையினர் தீவிர விசாரணை..!
கோவை வேடப்பட்டியைச் சேர்ந்தவர் சாம்சன் (வயது43). இவர் கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் பழைய நாணயங்கள் மற்றும் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். பவளப்பாறைகளை இவரது கடையில் அரிய வகையான தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் ஒரு ...
திருமண நிகழ்ச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை நண்பர் உதவியுடன் மடக்கி பிடித்த என்ஜினீயர்..!
கோவை அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் பசூர் பகுதிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். அங்கு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி மண்டபத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளிவே வந்தார். ...
அதிர்ச்சி தகவல்… தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு: யூனிட்டுக்கு எவ்வளவு தெரியணுமா..முழு விவரம் இதோ..!!
தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது. இதன்காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1.5 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி ...
ஜெயக்குமாரை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நேற்று ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஜேடிசி பிரபாகர், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளதால் ராயப்பேட்டை பகுதியில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்து இருந்த நிலையில், இன்று அதே கோரிக்கையை ...
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகாரப்பூர்வமற்ற மூன்றாம் தரப்பு செயலிகள் குவிந்து கிடக்கின்றன. அந்தவகையில் போலி கடன் செயலிகளும் குவிந்து கிடக்கிறது. இதன் மூலம் பல மோசடி சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். கடன் செயலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலி கடன் செயலியால் அண்மையில் ஒரு தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் ...
பிரதமர் நரேந்திர மோடி காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் . இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை) எஸ்.டி.ஐ விஷன் 2047 உள்ளிட்ட வெவ்வேறு கருப்பொருள் பகுதிகளில் அமர்வுகள் அடங்கும். அவை, ...