தனியார் நிறுவன மேனேஜர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை-கோவையில் பட்டப்பகலில் துணிகரம்..!

கோவை அருகில் உள்ள விளாங்குறிச்சி, முகாம்பிகை நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 54 )இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் தீபாவளி தினத்தில் காலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டார். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 19 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சண்முகசுந்தரம் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.