தேவர் ஜெயந்தியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு- டிரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு..!!

ராமநாதபுரம்: வரும் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.

பசும்பொன்னில் உள்ள முத்திராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும். அதைப்போல இந்த ஆண்டும் 115-வது தேவர் ஜெயந்தியும் திருபூஜை விழா வருகிற 30-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தபட்ட காவல் நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசும்பொன்னில் 3 டிரோன் கேமராக்கள், 92 நிரந்தர கேமராக்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இதனிடையே உயர்நீதிமன்றம் உத்தரவின்படி தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் ராமநாதபுரம் வருவாய் அதிகாரி சக்திவேல் வங்கியில் இருந்து பெற்றுகொண்டார். இவர் நினைவிடத்தில் வழிப்பாடு செய்யப்பட்டு தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும்.