பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் எல்லை தாண்டி வந்து இருக்கிறது. மேலும் ஆயுதங்களுடன் வந்த அந்த ஒரு ட்ரோன்களை பாதுகாப்பு படையினர் தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள். குறிப்பாக அதை நான்கு சீன துப்பாக்கிகளும் தோட்டக்கலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தக்கலா என்ற ஒரு கிராமத்தில் தான் பறந்து கொண்டு ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் ...

நம் நாடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக அனுசரிக்கின்றது. இந்த வருடம் தனது 74வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 1950 வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்முறைக்கு வரவில்லை. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவு குழுவுக்குத் தலைமையேற்றார். இதையடுத்து 1949ல் இந்தியா அரசியல் சாசன ...

ராணுவத்தில் இதுவரை 80 பெண் அதிகாரிகள் கர்னல் பதவிக்கு (தேர்வு தரம்) அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல் முறையாக அந்தந்த ஆயுதங்கள் மற்றும் சேவைகளில் கட்டளை பிரிவுகளுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் சிறப்பு எண். 3 தேர்வு வாரிய நடவடிக்கைகள், ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கியது. தற்போது இராணுவ தலைமையகத்தில் லெப்டினன்ட் ...

டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ஃபேஸ்புக், அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வரும் நிலையில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டில் உலகளவில் ...

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் ...

கடலூர் : பாஜக மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நேற்று  நடைபெற்றது . பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தச் செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் பாஜக ...

பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுவதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வருண்குமார் சின்கா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பொதுநல மனுவில், `மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக்கூடிய விஷயம். எனவே விதிமுறைகளுக்கு மீறி நடத்தப்படும் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல் 10 ஆண்டுகள் கட்சியிலேயே இல்லாமல் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றிபெற்றேன் என்று கூறிய டிடிவி தினகரன், இடைத்தேர்தலில் போட்டியிடும் தைரியம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ...