உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா: பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்..!

டெல்லி: உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது.

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

ஜப்பான், அமெரிக்கா,சீனா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. இதையடுத்து அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது.

இதனால் உலகம் முழுவது அந்தந்த நாடுகள் பொதுமுடக்கம் அமல்படுத்தியது. பின்னர் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்தநிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.