தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டையை சுழற்றியிருப்பது வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் ...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மற்ற கட்சிகளை விட பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இப்படி இருக்கும் இந்த ஊராட்சியில் இதுவரை ஒருமுறைதான் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலின் பொழுது தலைவர் பதவி ஆகியவை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது இந்த ஊரின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த முறையும் ...
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. ரோட்டோரங்களில் பாதுகாப்பு இல்லாமல் பேனர் வைப்பவர்களை விடுங்கள். இப்படி பேனர் வைப்பவர்களை சினிமா நடிகர்களும், அரசியல் தலைவர்களும் ஏன் கண்டிப்பதில்லை. கட்சி பேதமில்லாமல் எல்லோருமே இதை விரும்புகிறார்கள். பேனர் வைப்பவர்களுக்கு பதவியும், செல்வாக்கும் உயர்கிறது. தமிழகத்தில் பல மரணங்களும், விபத்துக்களும் இப்படி பாதுகாப்பில்லாமல் பேனர் வைப்பதால் நடந்துள்ளது. ...
சென்னை: ”12 மணிநேரம் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்காததால் எனது செல்போன், வீட்டில் உள்ள செல்போனை கேட்டு வாங்கி சென்றுள்ளனர். இது உச்சக்கட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது” என லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு ...
வடகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடர் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். சென்னை: தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில், நடந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக துறை உயர் அலுவலர்களுடன் ...
இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை பொருட்டு கட்சிகளுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அங்கீகாரத்தை ...
கோவையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமலாக்கத் துறை அலுவலர்கள் நேற்று மாலை இங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக 50க்கும் மேற்பட்ட கோவை மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ...
சென்னை: சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை தொடங்க கடந்தாண்டு சென்னைகாவல் துறை ...
மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்கள்: கோவை கலெக்டர் எச்சரிக்கை கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்., சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘ பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ...
இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த ரணவிக்ரமா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி படகு ஒன்று சட்டவிரோத வகையில் சிலரை ஏற்றி கொண்டு பட்டிகலோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த கடற்படை அதிகாரிகள் ...