மிஸ் இன்ஃபர்மேஷன்’ எனப்படும் தவறான தகவல்களைப் பரப்பும் நடைமுறை ஊடகத் துறையில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க பல முன்னணி ஊடகங்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டிஜிட்டல் மீடியா எனப்படும் இணையதள செய்தித்துறை வளர்ச்சி அடையத் தொடங்கியது. கிட்டத்தட்ட அனைவரது கையிலும் இன்று ஸ்மார்ட்போன் தவழ்ந்துவரும் நிலையில் ...
இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப்பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்கம் தொடங்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், உருக்கு ஆலையின் மூலம் முதலீடு ...
கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க டி.ஐ.ஜி. வந்தனா, எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கோவை வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் இந்த வழக்கு விசாரணை ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட தடயங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒப்படைக்கப்பட்டன. டி.ஐ.ஜி. வந்தனா ஐ.பி.எஸ். தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகில் கார் வெடித்து ஜமேசா முபின் என்பவர் பலியானார் .இந்த சம்பவத்தை தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உமா, ஸ்ரீதேவி, ராஜன், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் கடந்த 23ஆம் தேதி முதல் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ...
கோவை : பொள்ளாச்சி மகாலிங்கபுரம் வி கே. வி. லே அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 73) தொழிலதிபர். இவரது மனைவி சாந்தி ( வயது 64) இவர்கள் இருவரும் நேற்று காரில் பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.காரை மனைவி சாந்தி ஓட்டினார்.கணவர் ஆனந்த ராஜ் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தார். கோட்டூர் அருகே சென்றபோது ...
கோவை அருகில் உள்ள சுண்டக்காமுத்தூர் பி .என். டி .காலனி சேர்ந்தவர் சிவகுமார் .அவரது மகன் அருண் (வயது 22) பி.பி.ஏ.பட்டதாரி. சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார் நேற்று இவர் கோவை புதூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு புரோட்டா வாங்க சென்றார். 8 புரோட்டாவுக்கு ஆர்டர் கொடுத்தார்.பின்னர் அவர்கள் ...
கோவை போத்தனூர் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் மஜீத் ( வயது 62) இவர் கரும்பு கடையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு மனைவியுடன் நகை வாங்க சென்றார். 5 பவுன் நகை வாங்கிவிட்டு அந்த நகையை பையில் வைத்திருந்தார்.அந்தப் பையை கடையில் உள்ள நாற்காலியில் வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது அதிலிருந்து 5 ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது கொள்ளை சம்பவத்தை அங்கிருந்த காவலாளிகளான ஒம்பகதூர் மற்றும் கிருஷ்ணதபா தடுக்க முயன்றனர். இதில் ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணதபா படுகாயம் அடைந்தார். ...
கோவை: பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார் அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக இருந்து படித்த இளைஞர்கள் வேலைக்காக ...
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு முன் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க .சார்பில் வருகிற 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .சமூக விரோத செயல்களுக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜாதி, மதம். பாரா மல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் ...













