ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரூ.6 கோடி வருமானம்: தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்ற பாரத் கௌரவ் திட்டம் ..!

ந்தியாவின் பண்பாடு, பாரம்பரிய மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை மக்கள் பார்வையிட இந்திய ரயில்வே, பாரத் கௌரவ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது.

சுற்றுலா நிறுவனம் மூலம் இதுவரை ஆறு ஆன்மீக சுற்றுலா ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. இதனால் 6.3 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் ஏழாவது ஆன்மீக சுற்றுலா ரயில், மதுரை கூடல் நகர்- பஞ்சாப் அமிர்தசரஸ் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தெலுங்கானா மௌலாளி, ஜெய்பூர், ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.

கூடல் நகரில் இருந்து நவம்பர் 3ம் தேதி இரவு 07.40 மணிக்கு புறப்படும் இந்த சுற்றுலா ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று நவம்பர் 6ம் தேதியன்று மௌலாளி, நவம்பர் 8ஆம் தேதி அன்று ஜெய்ப்பூர், நவம்பர் 9ஆம் தேதி அன்று ஆக்ரா, நவம்பர் 10ஆம் தேதி அன்று டெல்லி, நவம்பர் 11ஆம் தேதி அன்று அமிர்தசரஸ் சென்றடையும்.

அங்கிருந்து நவம்பர் 13ஆம் தேதி அன்று கோவா சென்றடையும். பின்பு மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நவம்பர் 16ஆம் தேதி அன்று அதிகாலை 02.30 மணியளவில் கூடல் நகர் வந்து சேரும்.