கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோத வாடியில்உள்ள ஒரு மைதானத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக கிணத்துக்கடவு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனைநடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக வடுகபாளையம், வஞ்சிமுத்து (வயது 37) பவித்ரன் (வயது 28) ஆலந்துறை விஜயகுமார் ( வயது 37) ...
கோவை கும்பகோணம் இடையே நவம்பர் 6 முதல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:- வட கோவை கும்பகோணம் ரயில் வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 6 காலை 9 45 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் ...
கோவை திருப்பூர் ஈரோடு சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு கூடுதல் பெட்டி நினைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். மங்களூர் சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயிலில் குளிர் சாதன வசதிகள் கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதேபோல் மங்களூர் சென்ட்ரல் வராதந்திர சிறப்பு ரயில் குளிர்சாதன வசதி ...
கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காந்திபுரம், ஒண்டிபுதூர் உள்ள இடங்களில் சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த மாயழகு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கதிர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது ஆசாரிதின், அப்சர் கான், முகமத் தர்கா, முகமது ரியாஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் ...
கோவை ராஜவீதியை சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 55) இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர் வாங்கி தங்க ஆபரணங்களை தயார் செய்து அதனை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை கொடுத்த ஆர்டரின் ...
பஞ்சை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் ஜவுளித் தொழிலில் நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். முக்கியத்துவம் பெற்றுள்ள ஜவுளித்தொழில் பஞ்சு விலை உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக கடந்த மே மாதத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்தது. பஞ்சு விலை ...
பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி தந்தை, மகள் பரிதாப பலி- பள்ளிக்கு அழைத்து சென்றபோது நடந்த விபரீதம்..!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோபகுமார் (வயது 57). இவரது மகள் கவுரி (17). கவுரி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல மகளை பள்ளியில் விடுவதற்காக கோபகுமார் தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றார். அவர்கள் சீர்தார் சந்திப்பு பகுதியில் சென்றனர். ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் புதுபாடி பகுதியில் பூமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதிகாலை 3 காட்டு யானைகள் சேதப்படுத்தியது. கோவிலின் சுற்று சுவரை இடித்து தள்ளி கருவறையில் இருந்த பொருட்களை வெளியே இழுத்துத் போட்டு சேதப்படுத்தியது.அந்த சத்தத்தை கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் யானைகளை அங்கிருந்து ...
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப நாட்களாக குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. ...













