கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட 6 பேரிடம் என்.ஐ.ஏ 3 மணி நேரம் விசாரணை..!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது ஆசாரிதின், அப்சர் கான், முகமத் தர்கா, முகமது ரியாஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் இவர்கள் ஆறு பேர் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த வழக்கை என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது. 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ் ஆதரவு தொடர்பான குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளனர். ஆசாரிதீன், அப்சல் கான் ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் என் ஐ ஏ இந்த வழக்கை விசாரணை நடத்தி வருவதால் சென்னையில் உள்ள பூந்தமல்லி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கோவை சிறையில் உள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. ஐ.எஸ் தொடர்பு, வெடி.மருந்து வாங்க பணம் கொடுத்தவர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அவர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டு அந்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர்.