வடகோவை – கும்பகோணம் இடையே நவ.,6 முதல் பாரத் கௌரவ் ரயில் இயக்கம்..!

கோவை கும்பகோணம் இடையே நவம்பர் 6 முதல் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-

வட கோவை கும்பகோணம் ரயில் வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 6 காலை 9 45 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் மாலை 6 மணிக்கு கும்பகோணத்தை சென்றடையும். கும்பகோணம் – வடகோவை ரயில் திங்கட்கிழமை நவம்பர் 7 மாலை 3 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் இரவு 11.34 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது கும்பகோணம் மகாமக குளம், ஆதிகும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு செல்லும் யாத்திரையாக இயக்கப்படுகிறது.

இதுவரை வடகோவையிலிருந்து இயக்கப்பட்ட 7 ஆன்மீக சுற்றுலா ரயில்கள் மூலம் ரூபாய் 7.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.