உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ம் ஆண்டு ராமஜென்ம பூமி தொடர்பான ஊர்வலத்தின் பொழுது கலவரம் ஏற்பட்டு பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நடக்கவில்லை என பாஜக விளக்கம் அளித்தது. எனினும் பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ...

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் ...

ஆர்எல்வி எனப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை விண்ணில் ஏவி, அதை கடலில் இறக்கும் சோதனையை இஸ்ரோ கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொண்டது. அடுத்து விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல் தரையிறக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இந்த சோதனை கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. பரிசோதனையின் போது விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, ...

கனடா: சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ...

சென்னை : ‘மாரியம்மன் இண்டியன் பேங்க்’ போல தமிழகத்தின் பல இடங்களில் போலியான பெயரில் வங்கி கிளைகள் நடத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றதாக் போலி ஆவணம் தயாரித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு மோசடி செய்து வந்த சென்னையைச் சேர்ந்த ...

நவம்பர் 15ஆம் தேதி உலகின் மொத்த ஜனத்தொகை 800 கோடியை எட்டு விடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 வருடங்கள் எடுத்துள்ளது. உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவம்பர் 15 ஆம் தேதி 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் ...

டெல்லி: 2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. பிரதமர் மோடி அதற்கான லோகோ வெளியிட்டார். நாடு முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது. ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது வரலாற்று தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...

மதுரை: மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தில் விநாயகர் கோயில் அருகே 1000 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலையை ‘மதுரை பாண்டியர்கள் தேடி’ பயண குழுவின் தொல்லியல் ஆய்வாளர்கள் மதன், மணிகண்டன், அறிவுசெல்வம், தேவி கண்டுபிடித்தனர். அவர்கள் கூறியதாவது: தவ்வை தமிழகத்தில் கி.பி. 7ம் நுாற்றாண்டு முதல் 10ம் நுாற்றாண்டு வரை ...

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 95ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். டெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் கட்சி தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று (நவம்பர் 8) தனது 95ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த ...

நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி; டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் இன்று அதிகாலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. அதிகாலை 1.58 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாள எல்லையை ஒட்டிய ...