பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் சிக்கினார்

பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் சிக்கினார்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால் அவர் இன்னும் பணியில் சேரவில்லை என்று தெரிகிறது. இவர் தனது சொந்த ஊரில் ஒரு டீக் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வாலிபர் ஒருவருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டனர். அதை மனதில் வைத்திருந்த ராஜா அந்த வாலிபரை பழிவாங்க திட்டமிட்டு காத்திருந்தார். இந்நிலையில் அந்த வாலிபருக்கு திருமணம் ஆகி கோவையில் மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடைய மனைவி கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதை அறிந்த ராஜா அந்த வாலிபரை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக அவர் அந்த வாலிபரின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டார். மேலும் அதில் அந்தப் பெண்ணின் செல்போனில் எண்ணை பதிவிட்டு அதில் தொடர்பு கொண்டால் உல்லாசமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தனது மனைவியுடன் சென்று கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட ராஜாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.