கடனை திருப்பி கேட்ட புரோட்டா மாஸ்டரை நாற்காலியால் தாக்கிக் கொல்ல முயற்சி – கேரள வாலிபர் கைது..!

கோவை : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரை சேர்ந்தவர் ஷாஜகான் ( வயது 40) இவர் போத்தனூர் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஓட்டலில் வேலை பார்த்து வரும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஜ்மல் ( வயது 25) என்பவருக்கு 120 ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். அந்த பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அஜ்மல் ஓட்டலில் இருந்த நாற்காலியை தூக்கி ஷாஜகானை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குபதிவு செய்து அஜ்மலை கைது செய்தார். இவர் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவின கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.