என்னைப்பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தாயா? என்று கூறி முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது..!

கோவை ஆர் .எஸ். புரம். காமராஜர் வீதியை சேர்ந்தவர் முஹம்மத் அலி (வயது 71) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்றார்.அப்போது இவரை ஒருவர் வழிமறித்து என்னைப்பற்றி சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் கொடுக்கிறாயா? என்று கூறி தகராறு செய்தார். பின்னர் அவரை பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முகமது அலி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் விசாரணை நடத்தி கே. கே .புதூர், கருப்புசாமி வீதியை சேர்ந்த அப்துல் பஷீர் மகன் ரோஷன் (வயது 38) என்பவர் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.