மூதாட்டியிடம் நகை பறித்த இரண்டு பேர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த இரண்டு பேர் கைது

கோவை அடுத்த வடவள்ளி இடையார்பாளையம் ரோடு சின்னம்மா நகரை சேர்ந்தவர் மாலதி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் திடீரென மாலதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து புகார் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை அடுத்து மாலதியிடம் நகை பறித்ததாக ஆவாரம்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி, புதுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து. அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.