கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு கோவை குற்றாலம் அருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு கோவை குற்றாலம் அருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது அதேபோல் கோவையிலும் விடிய விடிய விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று பெய்த மழை சிறுவாணி மலை அடிவாரத்தில் 21 மில்லி மீட்டராக  பதிவாகி உள்ளது இந்நிலையில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று வனத் துறையினர் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்து உள்ளனர். மேலும் மறு அறிவிப்பு வரும் வரை அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் இன்று விடுமுறை தினத்தில் சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.