தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்களிடையே மோதல் ஏற்படுவதாகவும், திராவிட மாடல் ஆட்சிக்கு அதுவும் ஒரு உதாரணம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 60 வயது தொடங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபட்டபின் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர ...

சென்னை: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது என்றும், திமுகவை ஆளுநர்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று  (நவ.23) நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ...

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், ரகு, இளையராஜா, அடிபுள் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ...

திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் ...

பாதுகாக்கப்படுமா ? யானைகளின் உயிர் – வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சியை மலை ஒட்டி அமைந்து இருக்கிறது. உணவுக்காக வன விலங்குகள் அருகிலுள்ள கிராமங்களில் அடிக்கடி வருவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகளை விரட்டவும், அவற்றை கண்காணிக்கவும் வேட்டை ...

சிறை கைதிகள் உறவினர்களிடம் பேச இன்டர்காம் வசதி: தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக அறிமுகம் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று மொத்தம் 2026 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேசவும் குண்டத் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய், ...

விதிமுறை மீறி கட்டி வரும் கட்டிடம்: பூட்டி சீல் வைத்த கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அதிகளவு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும் என்ற விதியை நிறையபேர் பின்பற்றுவதில்லை. விண்ணப்பித்து உரிய காலத்தில் அனுமதி ...

உதய்பூர்: ராஜஸ்தானில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரையில் ஜி-20 அமைப்பின் முதல் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் ...

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் முதலில் செய்தது அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் தொடங்கி, தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரையும் பணியிலிருந்து நீக்கியது. அதைத்தொடர்ந்து facebook, whatsapp, instagram உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், ...

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 ...