மேட்டூர் அணையின் நீர் வரத்து 11,600 கன அடியாக அதிகரிப்பு..!

சேலம்: மேட்டூர் அணையின் நீர் வரத்து 7,600 கன‌ அடியில் இருந்து 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது. மாண்டஸ் புயல் கரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது .மேட்டூர் அணை உள்ளிட்ட இடங்களீல் மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை 7000 கன அடியாக நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இன்றுகாலை 11,600 கன அடியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை 9.30 அளவில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று மேட்டூர் அணை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மேட்டூர் அணை ஆனது 120 கன அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே வௌியேற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் காலை 9.30 அளவில் 21,000 கன அடி தண்ணீர் காவேரி அற்றில் வெளியேற்றப்படுகின்றது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று அணை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.