கோவை: சட்டசபை மரபை மீறி செயல்பட்ட கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்தும் ,அவர் பதவி விலக கோரியும் கோவை நீதிமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணியை சேர்ந்த முற்போக்கு கூட்டணி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் கவர்னருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் மூத்த வழக்கறிஞர்கள் அருள்மொழி ...

கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பச்சாபாளையத்தில் ஒரு காலி இடத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கல்லால் அடித்து சிதைக்கப்பட்டிருந்தது .இது குறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவரின் ...

கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள்வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பைகளை தனித்தனி குவியல்களாக கொட்டி தரம் பிரிக்கும் பணி நடக்கிறது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனால் அந்த ...

புதுடெல்லி: சர்வதேச அரங்கில் புதியதொரு விதி செய்வோம். ஐ.நா. சபையை மாற்றி அமைப்போம் என்று தெற்கு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த சர்வதேச அமைப்பில் அமெரிக்கா தலைமையிலான அணியும் ரஷ்யா தலைமையிலான அணியும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன. இரு பக்கமும் ...

டெல்லி அரசின் விளம்பரப் பிரிவான தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம் (டி.ஐ.பி), ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறும் விளம்பரங்களுக்காக செலவழித்த ரூ.163 கோடியை 10 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. மீட்பு அறிவிப்பு உடனடியாக ஆம் ஆத்மி ...

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்றார். மேலும், அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் ...

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2022) மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தான் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்ஜித் பல்திஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு, அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி வருகிறது. எனினும், அதனை இந்தியா ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு ஜம்மு ...

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராக செயல்பட்டு வந்த லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தளம் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த சரத் யாதவ் தனது 75வது வயதில் இன்று மரணமடைந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது. சமீப காலமாக பாஜகவை கடுமையாக ...

மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. தை முதல் நாளான ஜனவரி 15 தேதி தொடங்கி 16, 17 ஆகிய மூன்று நாட்கள் இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. ...