சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆராசாவுக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் ...

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் ...

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் ...

விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து 50 பாதிரியார்கள் மீது கொலை சதி திட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த துறைமுகம் ...

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கொள்கை பகுப்பாய்வு மையம் (CPA), அதன் முதல் உலகளாவிய சிறுபான்மை அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சிறுபான்மையினரை நடத்தும் விதத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளை இந்திய அமைப்பு மதிப்பிட்டது இதுவே முதல் முறை. இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது மனித உரிமைகள், சிறுபான்மையினர், மத சுதந்திரம் ...

சென்னை: பாஜகவில் உள்ள நடிகைகளை ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் மன்னிப்பு கோரியுள்ளார். சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு பேசி இருந்தார். ...

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீராங்கனைகள் சுட்டு வீழ்த்தினர். 3.11 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சஹர்பூர்கிராமத்தில் நேற்று முன்தினம் எல்லைப்பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் குழு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பகல் 11 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் ...

தி வால்கிங் டெட், ஜாம்பி லேண்ட் என பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், தமிழில் மிருதன் படத்திலும் ஜாம்பியை நாம் பார்த்தது உண்டு. வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் முற்றிலும் தன்னிலை மறந்து, மிருகமாக மாறி சக மனிதனை கடித்து குதறும் மோசமான விளைவுகளை ஜாம்பி வைரஸ் ஏற்படுத்தும். திரைப்படங்களில் காண்பது கற்பனைக்கதையாகவே இருந்தாலும், நிஜ வாழ்விலும் ஜாம்பி வைரசை ...

சென்னை : சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம், நானே இறங்கி அவருக்காக வேலை செய்வேன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அரசியலில் இறங்கி உதயநிதி நிற்கும் தொகுதியில் ...

சென்னை: கோவை கார் வெடிப்பு மற்றும் கர்நாடகாவில் மங்களூர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த நிலையில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் தினகர் குப்தா இன்று சென்னை வந்து டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து ஆலோசித்து நேரில் தகவல்களை பெற்றார். இதனால் மீண்டும் கோவை கார் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ...