நள்ளிரவில் வீடு புகுந்து கணவர், மனைவியை தாக்கி நகை, செல்போன் பறிப்பு – 6 திருநங்கைகள் கைது..!

கோவை புலியகுளம் அந்தோணியார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வராஜ். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 24) இவர் நேற்று நள்ளிரவில் ஒரு சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 6 திருநங்கைகள் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காளீஸ்வரி வீட்டினுள் புகுந்து அவரை கையாலும், செருப்பாலும் தாக்கினார்கள் .இதை தடுத்த அவரது கணவர் அந்தோணி செல்வராஜை கல்லால் தாக்கினார்கள்.இதில் இருவரும் காயமடைந்தனர்.பின்னர் அவரது மனைவிடம் இருந்த கால் பவுன் தங்க செயின், செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி ஓடி விட்டனர்..இதுகுறித்து காளீஸ்வரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் ராணி சந்திரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுதகராறு செய்து கொண்டிருந்தபுலியகுளம் கல்லுக்குழி வீதியை சேர்ந்த விக்னேஷ் என்ற ஷாமிலி (வயது 19)புலிய குளம் .மசால் லே-அவுட்டை சேர்ந்த தினேஷ் என்ற தீனக்க்ஷயா (வயது 19)அம்மன் குளம் ,நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மோகன் குமார் என்ற யாஷினி (வயது 28)பிரபாகரன் என்ற இந்துஜா (வயது 25)பால சுப்பிரமணி என்ற மவுனிகா (வயது 26)புலியகுளம் அந்தோணியார் கோவில் வீதியைச் சேர்ந்த மனோஜ் என்ற சர்விகா (வயது 16) ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் 6 பேர் மீதும் கொலை மிரட்டல், திருட்டு உட்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.