கோவை வக்கீல்கள் சங்க தலைவர் அருள்மொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது .அதில் செயற்குழுவின் பதவி காலத்தை ஒரு ஆண்டு என ஏற்கனவே உள்ள விதிமுறையை தொடர்வது என்றும் ‘ஆனால் தேர்தலை நிதி ஆண்டுக்கு ஏற்ப ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஒரு ஆண்டு ...

மோட்டார் சைக்கிள் டாக்சியை தடை செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவையில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதனை நம்பி 15,000 குடும்பத்தினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக தனியார் மோட்டார் சைக்கிள் டாக்ஸி இயங்கி வருகின்றன. இதன் மூலம் பயணிகளை வாடகைக்கு அழைத்து ...

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டிற்குள் புகுந்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டை, 18-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் (நேற்று) நீடித்தது. மரியுபோலில் நடத்தப்பட்ட தாக்குதலால், அங்குள்ள உணவுப்பொருட்கள் சேமிப்புக் கிடங்கு முழுமையாக சேதமடைந்தது. விசில்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஆயுதக்கிடங்கு தரைமட்டமானது. உக்ரைனின் ...

சென்னை: சென்னை தரமணியில், “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ...

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரமேஷ், ரோடிக், அஜித் ,கொலம்பஸ், இமான், லின்சன் ,சவுத்தி ,இஸ்ரேல் ஆகிய 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர், அத்துடன் ...

கொரோனா பரவல் காரணமாக அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அதற்குள் நான்காவது அலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் பரவ தொடங்கியுள்ளது. ...

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. ...

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு சசிதரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி மிகவும் தைரியமானவர், சுறுசுறுப்பானவர். அரசியல் ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய ...

கனடா: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர். கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ...

சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், வீடுகளில் இருந்து பதறியடித்தபடி வெளியே வந்த மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். நடுநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா என்ற ...