மும்பையில் திடீரென 144 தடை (ஊரடங்கு) உத்தரவை வரும் 4-ம் தேதி முதல் 2023, ஜனவரி 2ம் தேதிவரை பிறப்பித்து மும்பை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். மும்பையில் அமைதியை நிலைநாட்டவும், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் எந்த தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவின்படி, மும்பை நகரில் 5 நபர்கள் அதற்கு ...

அகமதாபாத்: குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள்( 5ம் தேதி) நடைபெற உள்ளது. ...

அன்னூர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசு ஆணையை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 7-ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மீளுமிந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார். இதுகுறித்த அறிவிப்பில், அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி திமுக அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ...

பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெயில் 30-40 சதவீதம் தள்ளுபடி வழங்க ரஷ்யா மறுத்துவிட்டது. அப்படியொரு சலுகை வழங்கப்பட மாட்டாது என்று ரஷ்யா தெளிவாகக் கூறியதால், பாகிஸ்தான் தூதுக்குழு வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று. பாகிஸ்தானின் பெட்ரோலியத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் தலைமையிலான குழு நவம்பர் 29ஆம் தேதி ரஷ்யா சென்றது. இந்த தூதுக்குழு நவம்பர் 30 அன்று ரஷ்ய ...

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு பாரதிய ஜனதா கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சராகவும், மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் அமரீந்தர் சிங். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய இவர், சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது ...

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலைத் தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு ...

கார் விற்பதாக கூறி நூதன முறையில் 31 லட்ச ரூபாய் மோசடி : மூன்று பேருக்கு போலீஸ் வலை சென்னை இ.சி.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் பாபு. இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக இவர் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி விற்பது வழக்கம். இவரிடம் ஏற்கனவே ...

பா.ஜ.க மகளிர் அணி கூட்டம்: கோவையில் நடைபெற்றது பா.ஜ.க கோவை மாநகர், மாவட்ட மகளிர் அணி கூட்டம் கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அரசியலில் பெண்கள் தன்னம்பிக்கை உடனும், தைரியமாகவும் ...

ஜனவரி 1 முதல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சார ஆட்டோக்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்‌. மத்திய அரசின் காற்றுத் தரக் குழு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு ஜனவரி 1 முதல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சார ஆட்டோக்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள வழியம்பாளையம் வி.ஜி.பி .பிரேம் நகரை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 47) இவர் நேற்று சரவணம்பட்டி -துடியலூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்குள்ள ஒரு பிளாசா முன் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து ...