கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்தத் தொகுதியின் ...
இந்தியாவுக்கு வருகை தந்த ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் டெல்லியில் சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய சம்பவம் கவனமீர்த்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் நேற்று முன்தினம் (பிப்.25) டெல்லி வந்தார். இந்தியா – ஜெர்மனி இடையேயான இருதரப்பு உறவுகளை ...
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட உலியூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(58). விவசாயி. இவர் உலியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அப்போது வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை திடீரென ராதாகிருஷ்ணனை தாக்க முயற்சித்தது. யானை வருவதை பார்த்ததும் ராதாகிருஷ்ணன் திடீரென அங்கிருந்து அலறி அடித்து ...
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மாசி மகதிருத்தேர் திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவாலின் காரணமாக பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேர் ...
கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சை பிரிவு, எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு உள்பட ஏராளமான துறைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகளை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதத்திற்கான தரவரிசை ...
கோவையை சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இந்தநிலையில் இவருக்கும், 16 வயது சிறுமியான பிளஸ் – 2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். மேலும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கல்லூரி ...
கோவையை அருகே உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 62) அங்குள்ள பெட்ரோல் பங்கில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் தனது மனைவி சாந்தியுடன் ஸ்கூட்டரில் சிங்கையன் புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ...
கோவை துடியலூர் என்ஜி ஜி.ஓ காலனி பக்கமுள்ள துரைராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள் பிரபு . இவரது மனைவி சந்திர பிரபா, இவர் ஆர். எஸ் .புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று டவுண் பஸ்சில் பயணம் செய்தார். பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார் .அப்போது இவரது கழுத்தில் ...
கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள நரசிம்மபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் குழந்தைசாமி இவரது மனைவி ஜெசிந்தா மேரி (வயது 42) இவரிடம் கோவையை சேர்ந்த சுரேஷ்குமார் .ஜெயா செல்வி ஆகியோர் அறிமுகமானார்கள்.அவர்கள் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பல் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருப்பதாக கூறினார்கள்.இதை நம்பிய ஜெசிந்தா மேரி தனது ...
மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சின் டிரைவராக வீரபாண்டி பிரிவை சேர்ந்த மனோஜ்குமார்(வயது24) என்பவரும், நடத்துனராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு சாவடியூர் புதூரை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு பஸ்சை மனோஜ்குமார் ஓட்டி ...












