கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பங்களாக்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். குறிப்பாக பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள கலெக்டர் பங்களாவில் சந்தனமரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...

கோவை பீளமேட்டை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் நேற்று அவினாசி ரோட்டில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர் இங்கு அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் விருப்பப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி விபசாரத்திற்கு அழைத்தார். இதுகுறித்து அந்த வாலிபர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ...

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழி முற்றிலும் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி-வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. அதில் ...

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையை சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் கொண்டாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.அதன் படி கோவை பேரூர் ஆதின வளாகத்தில் பேரூராதினம் மருதாசல அடிகளாருடன் இணைந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா நடைபெற்றது.இதில் இஸ்லாமிய ...

கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரின் மனைவி சரஸ்வதி (33). இவருக்கு சொந்த ஊர் தர்மபுரி. சரஸ்வதி அவரது கணவர் செந்தில்குமாரும் கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் சுடலைக்கண்ணு (42) என்பவர் வீட்டின் உரிமையாளர் ராமசாமியிடம் சரஸ்வதியின் வீட்டிற்கு அடிக்கடி மர்ம ...

கோவை : சாலை பாதுகாப்பு வார விழாவின் 2-வது நாளான இன்று கோவை மாநகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் சிக்னலில் தனியார் தொண்டு நிறுவனம் மாநகர போலீசாருடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ...

கோவை : நடிகர் அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் நேற்று முன்தினம் கோவையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அதிகாலை 3 மணிக்கு சினிமா படம் வெளியிடக்கூடாது என்று மாநகர காவல் துறை தியேட்டர் நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மீறி அதிகாலை 3 மணிக்கு ...

கோவை: தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் தற்போது முதலே பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றனர். இந்தநிலையில், கோவை மாநகராட்சி சார்பில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ...

கோவை: சட்டசபை மரபை மீறி செயல்பட்ட கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்தும் ,அவர் பதவி விலக கோரியும் கோவை நீதிமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணியை சேர்ந்த முற்போக்கு கூட்டணி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் கவர்னருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் மூத்த வழக்கறிஞர்கள் அருள்மொழி ...

கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பச்சாபாளையத்தில் ஒரு காலி இடத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கல்லால் அடித்து சிதைக்கப்பட்டிருந்தது .இது குறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவரின் ...