போடு ஆட்டம் போடு… கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழாவில் ஆடி மகிழ்ந்த பெண் கவுன்சிலர்கள்..!

கோவை: தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் தற்போது முதலே பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், கோவை மாநகராட்சி சார்பில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவுக்காக மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கரும்பு, வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு மாநகராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் புத்தாடைகள் அணிந்து வந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கோலப்போட்டி, உரியடித்தல், சமையல் போட்டி, பொங்கல் பானை அலங்கரித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேரு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இணைந்து பொங்கல் வைத்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர். மேலும், சினிமா பாடல்களுக்கு பெண் கவுன்சிலர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இது அங்குள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.