கோவை: சாலை பாதுகாப்பு வாரம் 11-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி 3-ம் நாளான இன்று கோவையில் மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார், ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர்கள் மற்றும் உயிர் அமைப்பினர் பங்கேற்றனர். சாலை பாதுகாப்பு ...

தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறை தண்டனை 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்… கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 50 வயது தந்தை கடந்த 2012 ஆம் ஆண்டு ...

கோவை: காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து, வெள்ளலூர் பேச்சி அம்மன் கோவில் வீதியில் வசித்து வருகின்றனர். இருவரும் பொள்ளாச்சி ரோடு டோல்கேட் அருகே ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். ...

கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜப்பன் இவரது மகன் ராஜசேகர் இவர் அடுப்புக்கரி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே ரஞ்சித் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வந்தார். வாகனங்களுக்கு டயர் விற்பனை தொழில் செய்யலாம் என்று கூறி ரூபாய் 15 லட்சத்து  65 ஆயிரம் வாங்கி விட்டு மேலும் சிலரிடம் பணத்தை ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). இவர் ராஜா வீதியில் சிறுதானிய கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மனோகரன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்றார். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காத்திருந்தார். அப்போது பின்னால், வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வழி விடுமாறு தொடர்ந்து ...

கோவை: மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் வளர்ப்பு பிராணிகள் கடை ஒன்று உள்ளது. இங்கு அனுமதியின்றி பவளப்பாறைகள் விற்பனை செய்யப்படுவதாக மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினம் குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு படையினர் மூலம் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ...

கோவை: வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் ரத்தினபுரி பாலம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...

கோவை செல்வபுரம் வடக்கு அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் மாசானம் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாசானம் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது கல்லமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் மாசானத்திற்கு ...

பொள்ளாச்சி: தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விடுமுறை நாட்களான இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை பலூன் திருவிழா நடக்கிறது. பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் இன்று காலை பலூன் திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், ...

கோவை: பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதைடுத்து கோவை கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் டன் கணக்கில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆர்.எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியில் ...