கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டில் 42 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி அறிவித்துள்ளார். இதுகுறித்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில், “பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 15 பத்திரிகையாளர்கள், சிந்துவை சேர்ந்த 11 பத்திரிகையாளர்கள், கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த 13 பத்திரிகையாளர்கள், பலுசிஸ்தானைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இதனால் காலியாக ...

அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ...

ஊட்டி: மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர், பணியர், கோத்தர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பூர்வகுடி இன மக்களான இவர்கள் திருமண விழாக்களும், கோவில் நிகழ்ச்சிகளும் இன்றும் பழமை மாறாமல் தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய வழிகாட்டுதலின் முறைப்படி நடத்தி வருகின்றனர். இவர்களில் ...

கோவை: வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை எடுத்து கூறும் வாகன ஊர்வலம் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் கவுரவமாக கருதப்படுகிறது. இந்நிலையில் வருகிற 26-ந் தேதி டெல்லியில் ...

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 29-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்று காலை 6.45 ...

கோவை வீரையம்பாளையம் அருகே உள்ள காந்தி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47). லோடு வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் நேரு நகர் காளப்பட்டி ரோட்டில் கட்டிட மேஸ்திரி மணிகண்டன் என்பவருடன் லோடு வேனில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை ரவியின் மீது ...

வீட்டு வேலைக்கு என்று சொல்லி வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அடிமைபோல் அடைத்து வைத்து கொடுமை செய்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் அங்கு மாட்டியுள்ளனர் எனவும் மஸ்கட்டில் இருந்து தாயகம் திரும்பிய பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப வறுமை ...

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் காச நோய் பாதிப்பு 19 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள்பட்ட பெருந்தொற்றுகளில் ஒன்று காசநோய். பாக்டீரியாவால் பரவக்கூடிய இந்த தொற்றுக்கு தொடர் இருமல், சளி, காய்ச்சல், உடல் எடை குறைவது உள்ளிட்டவை பிரதான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. நாள்பட்ட நோயாளிகளிடம் இருந்து அதிகளவில் பரவ கூடியது என்ற நிலையில், 1962 ...

உலகளவில் அதிக அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்காவும், நபராக அமெரிக்க அதிபரும் கருதப்படுகின்றனர். அமெரிக்கா நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்ற வல்லமை பெற்றுள்ளது. அதேநேரம் அதிபரே தவறு செய்தாலும் கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்க அங்கு சட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது சிக்கியுள்ளார் அதிபர் பைடன். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் ...