இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு பயணிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலத்தில் வாங்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மற்றும் அமிர்தசரஸ் இடையே பயணம் செய்ய இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தலாம். இந்த டிக்கெட்டில் 9 ...

ஈரோடு: இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்நாடு பாஜக முடிவெடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று குஜராத்துக்கு பறந்தார் ஓ பன்னீர்செல்வம். நேற்று இந்த பயணத்தில் அவர் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறாராம். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு ( எஸ். ஐ .சி )உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பார்த்திபன். இவர் கோவை மாநகர நூண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராகவும், பின்னர் சிங்காநல்லூர் சட்டம் – ஒழுங்கு உதவி போலீஸ் கமிஷனராகவும் மாற்றப்பட்டார். இந்த இடம் காலியாக இருந்தது. அவருக்கு பதிலாக சிறப்பு நுண்ணறிவு ...

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றசம்பவங்களை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்புக்காகவும் சிஎம்டிஏ அதிகாரி தலைமையில், 40 போலீசார் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், வெளியூர் பயணிகளை குறிவைத்தும் வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு, பிக்பாக்கெட், லேப்டாப் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து ...

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் தொண்டர்கள் இன்று முதல் வரும் ஜனவரி 26ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.27ம் ...

பாகிஸ்தான் முழுமைக்கும் மின்சாரம் சப்ளை செய்யும் தேசிய பகிர்மானத் தளத்தில் ஏற்பட்ட கோளாறால், அந்த நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. இது குறித்து பாகிஸ்தான் மின்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ” இன்று காலை 7.34 மணிக்கு பாகிஸ்தானின் தேசிய மின்பகிர்மானத்தில் திடீரென மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டது. இதனால் நாடுமுழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால், ...

சென்னை மதுரவாயலில் திமுக சார்பில் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமை தாங்கிய நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது ...

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிமனை கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பந்தல்கால் நட்டு பணியை தொடங்கி வைத்தார். ...

கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று  இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. ...

ஈரோடுகிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது ...