சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு பெருநிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ...

கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர் – ஆலப்புழா விரைவு ரயிலில் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ரயிலின் ஒரு பெட்டி தீப்பற்றி எரிந்த நிலையில், மற்ற பெட்டிகள் உடனடியாக ...

கலிபோர்னியா: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்காவின் கலிபோர்னியா கூட்டத்தில் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் முழக்கமிட்டனர். ஆனால் ராகுல் காந்தி கோபப்படாமல் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ...

கரூரில் மின்துறை மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கிய ரெய்டு 6வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில் இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒப்பந்ததாரர் வீட்டில் நடைப்பெற்ற ரெய்டில் அள்ள அள்ள பணம் சிக்கியுள்ளது. அந்த பணத்திற்கான கணக்கு கேட்கையில், ...

நாட்டின் ஏழைகளை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் கட்சி கொள்கையாக கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தியாவில் 9 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதை, நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ...

என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த ஒரு சிலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்த தகவலின்படி இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ...

புற்று நோய்களுக்கு புகையிலை பொருட்களே முக்கிய காரணம் ஆகும். எனவே புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சார்பில் 1987-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 31-ந்தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் படி நேற்று உலக புகையிலை எதிர்ப்பு ...

 சென்னை கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டுள்ளது. இம்மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, ...

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயும் கீழேயும் புதிய எல்லைகளை ஆராய்வதால், அந்நாட்டு விஞ்ஞானிகள் நிலத்தில் 10,000 மீட்டர் (32,808 அடி) துளையை போடத் தொடங்கியுள்ளனர். சீனாவின் ஆழமான ஆழ்துளைக் கிணறுக்கான துளையிடும் பணி செவ்வாயன்று நாட்டின் எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியது. இது குறித்து ...

சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து துணைவேந்தர்களுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டது. அதற்கேற்ப, மாநில உயர் கல்வி கவுன்சில் ஒருங்கிணைந்த ...