பயணிகள் ரயிலுக்கு மீண்டும் தீ வைத்த மர்ம நபர்… ஒரு பெட்டி முழுவதும் எரிந்து நாசம்… கேரளாவில் பதற்றம்..!

கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர் – ஆலப்புழா விரைவு ரயிலில் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ரயிலின் ஒரு பெட்டி தீப்பற்றி எரிந்த நிலையில், மற்ற பெட்டிகள் உடனடியாக கழற்றிவிடப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எரிபொருளுடன் ரயிலில் ஏறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே ரயிலுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.