இந்தியாவில் முதன் முறையாக இ20 பெட்ரோலை ஜியோ-பிபி நிறுவனம் சில்லறை விற்பனையைக் குறிப்பிட்ட பங்க்களில் துவங்கியுள்ளது.இந்த பெட்ரால் விலை மற்ற பெட்ரோலை விடக் குறைவாக இருக்கும். எதிர்காலத்தில் இது லிட்டர் ரூ60க்கும் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம். இந்தியா தனது பெட்ரோல் தேவைக்காக வெளிநாடுகளையே சார்ந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி ...
இந்தோனேசியாவின் பப்புவா வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஒரு ஹொட்டலின் கட்டிடங்கள் ...
கர்நாடகம் மாநிலம் சிவமோகாவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் பெயர் சூட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். பெங்களூரு: கர்நாடகம் மாநிலம் சிவமோகாவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் பெயர் சூட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பரிந்துரையை ...
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்காக பெரிய அளவில் நூலகம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இலக்கியம், கவிதை, நாவல் என பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கைதிகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக, கேபிள் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ ஒளிபரப்பு செய்யும் டிஜிட்டல் நூலக திட்டம், மதுரை ...
புதுடெல்லி: பிரபல விளையாட்டு வீராங்கனையும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷா நேற்று மாநிலங்களவையை சிறிது நேரம் வழிநடத்தினார். அப்போது புதிய மைல்கற்களை உருவாக்குவேன் என நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இதனிடையே, குடியரசு ...
இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) தெரிவித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் லித்தியம் வளங்கள் (ஜி3) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே லித்தியம் வளங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, ...
மாசு அடைந்த நொய்யல் ஆறு: நடவடிக்கை எடுக்கப்படுமா ? – பொதுமக்கள் கோவைக்கு மேற்கு தொடர்ச்சி சிறுவாணி மலைப் பகுதியின் பல்வேறு சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து நொய்யல் ஆறாக பாய்கிறது. பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. ...
புதுடெல்லி: கிரிப்டோ சொத்துகளை நெறிமுறைப்படுத்த உலக அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க வேண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிடம் வலியுறுத்தியுள்ளார். இம்மாத இறுதியில் பெங்களூருவில் ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று நிர்மலா ...
சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்த அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா. சமீபத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் தேர்வின்போது, ஆவடி மாநகர செயலாளராக பதவி ஏற்றார். இந்த நிலையில், ஆசிம்ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த சன்.பிரகாஷ் என்பவர் நியமிக்கபட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், தனியார் கல்லூரியில் நடைபெற்ற ...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலினை முன்னிட்டு அதிமுக சார்பாக வேட்பாளர் அறிமுகக் கூட்டமானது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து பேசிய அவர், ஈரோட்டில் ஏரிகள் தூர்வாரப்பட்டன. பல நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஒரு சொட்டு ...