கோவை :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 29
) இவர் கோவை காந்திபுரம் ஜீவானந்தம் ரோடு, 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் 9 – 30 மணிக்கு 3 பேர் பாருக்கு சென்றனர். ‘மதுபாட்டில் தருமாறு கேட்டனர் .அவர் 12 மணிக்கு மேல் கடை திறந்த பிறகு வாருங்கள் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரிடம் இருந்த 300 ரூபாயை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இது குறித்து ராஜ்குமார் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த மோசஸ் இமானுவேல் மோசஸ் ( வயது 28) ரத்தினபுரி வ .உ. சி. வீதியைச் சேர்ந்த தீபக் என்ற தீபக் தமிழா (வயது 20)ரத்தினபுரி பட்டேல் வீதியைச் சேர்ந்த பூபதி ( வயது 24) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது ரத்தினபுரி, காட்டூர் காவல் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply