கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள அத்திப்பாளையம் பிரிவில் ஒரு சர்ச் பின்புறம் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று இங்கிருந்த 30 மீட்டர் டவர்,
ஷெல்டர்,பேட்டரி, ஜெனரேட்டர் போன்ற பொருட்களை யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ. 11 லட்சத்து 48 ஆயிரத்து 324 ஆகும். இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த அர்ஜுனன் ( வயது 49) நீதிமன்ற மூலம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply