கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அய்யப்பரெட்டி புதூரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 37) நேற்று இவர் தனது பைக்கில் தனது பாட்டி வெள்ளையம்மாள்(வயது 98) ஜெய்ராம் (வயது 12)ஆகியோரை பின்னால் ஏற்றிக்கொண்டு அன்னூர் – புளியம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அண்ணாநகர் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் ஜெய்ராம் இறந்தார்.வெள்ளையம்மாள்,அசோக்குமார் ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக புஞ்சை புளியம்பட்டி கோவில் புதூரைச் சேர்ந்த கார் டிரைவர் சின்னசாமி (வயது 66 ) என்பவர் கைது செய்யப்பட்டார் . மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply