ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்தத் தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் ...
கோவையில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை, 100 அடி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேம்பால தூண்களில் அரசியல் கட்சி, தனி நபர் உள்ளிட்ட பலர் எச்சரிக்கையையும் மீறி போஸ்டர்கள் ஒட்டுவதால், நகரின் தூய்மை மற்றும் அழகு கெடுவதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா நேற்று மாலை தெற்கு உக்கடம், புல்லுக்காடு. ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள கழிவு நீர் பண்ணை அருகே சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது ...
கோவை மாவட்டம் சோமனூர் நகராட்சி அலுவலகம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா சாக்லெட் விற்பனை ...
கோவை அருகே உள்ள வேடப்பட்டி குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 34) இவர் ஆர். எஸ். புரம் .பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் உடையவர் . இவர்கள் கடந்த 27ஆம் தேதி ஆர் எஸ் புரம் லாலி ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேற்குத் தொடர் மலைப் பகுதியான தமிழக கேரளா எல்லையில் உள்ள ஆனைகட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளனர். அப்பொழுது அவரது நான்கு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக சுமார் மூன்று அடி நீளம் கொண்ட பறக்கும் பாம்பு சிக்கிக் கொண்டது. அதனை வாகனத்தை சுத்தம் செய்யும் போது பார்த்து உள்ளார். ...
கோவை ஆர். எஸ் .புரம். மேற்கு பொன்னுரங்கம் வீதியை சேர்ந்தவர் தர்ஷந்த் ஜெயின், இவரது மகன்.பியூஸ் ஜெயந்த் (வயது 35) இவர் ஆர் எஸ் புரம் சீனிவாச ராகவ வீதியில் பிரசாந்த் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையில் நகை தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ...
கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார். இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையை பார்க்கவே கோவிலுக்கு ...
கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஷன் குமார் ( வயது 21) இவர் நெகமம் அருகே உள்ள ‘ அக்ரி புட் ‘தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 2 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று செல்போனில் பேசி தனது காதலியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாராம். பின்னர் அவர் அந்த நிறுவனத்தில் உள்ள வேப்பமரத்தில் ...
கோவை மாவட்ட பொள்ளாச்சி பக்கம் உள்ள புளியம்பட்டி எம்.ஜி.ஆர். காலனி சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி நாச்சியம்மாள்( வயது 62) இவர் நேற்று பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் நடந்து சென்றார். புளியம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. ...