பா.ஜ.க பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்: வாகனங்களை எரிக்க முயற்சி

பா.ஜ.க பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்: வாகனங்களை எரிக்க முயற்சி

கோவை, பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க பிரமுகர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் எரி பொருள் வீசி வாகனங்களை எரிக்க முயற்சி. குமரன் நகர் பகுதியில் சுமார் 5000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் பா.ஜ.க வை சேர்ந்த பொன்ராஜ், சிவா மற்றும் சரவணகுமார் ஆகியோர் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர்களாக உள்ளனர். இந்நிலையில்
இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பொன்ராஜ் சிவா மற்றும் சரவணகுமார் ஆகியோரின் கார் மற்றும் ஆட்டோ மீது கோடரியால் தாக்கி கண்ணாடிகளை உடைத்தும், டீசல் மற்றும் பெட்ரோல் குண்டு வீசியும் எரிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த மூன்று தனி படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.