கோவை அருகே அன்னூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னுார் பக்கம் உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் அன்புராஜ்; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மகள் சந்திரகாந்தா (வயது 48) இவர் திருப்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சேலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் ,சில மாதங்களாக மருத்துவ விடுப்பில் உள்ளார்.கணேசபுரத்தில் உள்ள இவரது வீட்டில் நேற்று காலை 8:05 மணிக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை ஈரோடு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில், ஒரு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்., மற்றும் 4 போலீசார் என 6 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது..
காலை 8:05 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6:10க்கு முடிந்தது.வீட்டில், தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 6 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள அந்த வீட்டின் அனைத்து அறைகளிலும், பீரோ, லாக்கர் உள்ளிட்டவைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
Leave a Reply